புதுச்சேரி

Sasikala | புதுச்சேரி வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட அ.இ.பு.த.ம.மு.க

புதுச்சேரியில் வேட்புமனு தாக்கல் 23-ந்தேதி (நாளை) வரை நடக்கிறது.

மாலை மலர்

புதுச்சேரியில் மொத்தமுள்ள 30 தொகுதிகளுக்கும் ஏப்.9-ந்தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. வேட்புமனு தாக்கல் 23-ந்தேதி (நாளை) வரை நடக்கிறது.

இதனால், புதுச்சேரியில் போட்டியிடும் அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டனர்.

நாளை கடைசி நாள் என்கிற நிலையில், அ.இ.பு.த.ம.மு.க சார்பில் புதுச்சேரி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா வெளியிட்டார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழக ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, 09.04.2026 அன்று நடைபெற உள்ள புதுச்சேரி மாநில சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில், அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாகக் கீழ்கண்டவர்கள் கீழ்க்காணும் சட்டமன்றத் தொகுதிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

புதுச்சேரி மாநிலம்

1.நெட்டப்பாக்கம் (தனி) (22): Dr. K. சிலம்பரசன்

2. வில்லியனூர் (5) : திரு. M. நந்தகோபால்

3. உழவர்கரை (6) : திருமதி. M.U. லாவண்யா

4. இந்திரா நகர் (8) : திரு. S. ஜெயபால் (எ) செங்கேணி

இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.