புதுச்சேரி

புதுச்சேரி தேர்தலிலும் களம் காணும் சசிகலா: 4 தொகுதிகளில் போட்டி

நெட்டப்பாக்கம், வில்லியனூர், உழவர்கரை, இந்திரா நகர் ஆகிய 4 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

புதுச்சேரி:

அனைத்திந்திய புரட்சி தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ள சசிகலா தென்னந்தோப்பு சின்னத்தில் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார்.

அவர் தமிழகத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாசை சந்தித்தார். பா.ம.க. நிறுவனர் ராமதாசுடன் இணைந்து கூட்டணி அமைத்து சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ளதாக அவர் அறிவித்தார்.

இந்த கட்சி புதுவையில் முன்னாள் ஐ.எப்.எஸ். அதிகாரி சத்தியமூர்த்தி தொடங்கிய செங்கோல் நீதி மக்கள் முன்னேற்ற கழகத்துடன் கூட்டணி அமைத்து, நெட்டப்பாக்கம், வில்லியனூர், உழவர்கரை, இந்திரா நகர் ஆகிய 4 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

செங்கோல் நீதி மக்கள் முன்னேற்ற கழகம், மங்கலம், பாகூர், திருபுவனை, ராஜ்பவன், ஏம்பலம், உப்பளம், உருளையன்பேட்டை, திருநள்ளாறு, காரைக்கால் வடக்கு, அரியாங்குப்பம் ஆகிய 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

SCROLL FOR NEXT