புதுச்சேரி

புதுச்சேரியில் சட்டப்பேரவை புதுப்பிக்கும் பணி தீவிரம்

சட்டப்பேரவையிலுள்ள தரையில் டைல்ஸ், மொசைக் ஆகியவை பாலிஸ் போடும் பணி நடந்து வருகிறது.

புதுவை சட்டப்பேரவைத் தேர்தல் கடந் 9-ந்தேதி நடைபெற்றது.

வரும் 4-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த நிலையில் சட்டப்பேரவையில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அலுவலகங்களை காலி செய்தனர். தொடர்ந்து தேர்தல் முடிவுக்கு பின்னர் புதிய அமைச்சரவை பொறுப்பு ஏற்க உள்ளனர்.

அதற்காக சட்டப்பேரவை தயாராக தொடங்கியுள்ளது. இதற்காக சட்டப்பேரவையை புதுப்பிக்கும் பணி நடக்கிறது. அமைச்சர் அறைகளுக்கு வெளியே பெயிண்ட் அடித்து மராமத்து பணிகள் நடக்கிறது. குப்பைகள் அகற்றப்பட்டு புது பொலிவு பெறுகிறது.

குறிப்பாக சட்டப்பேரவையிலுள்ள தரையில் டைல்ஸ், மொசைக் ஆகியவை பாலிஸ் போடும் பணி நடந்து வருகிறது. அதேநேரத்தில் அமைச்சர், எம்எல்ஏ அறைகளுக்குள் எந்த பணியும் நடைபெறவில்லை.

ஏனெனில் புதிதாக பதவி ஏற்கும் அமைச்சர்கள் தங்களின் வாஸ்துக்கு ஏற்ப அறைகளை மாற்றி அமைப்பார்கள்.