அதிகாரிகளிடம் எதிர்க்கட்சித் தலைவர் சிவா ஆலோசனை வழங்கிய காட்சி. 
புதுச்சேரி

குடிநீர் விநியோகம் சீரமைப்பு

குடிநீர் விநியோகத்தில் போதிய அழுத்தம் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது.போக்குவதற்கு கம்பிரசர் மூலம் உந்தப்பட்டு குடிநீர் விநியோகம் சீர் செய்யப்பட்டது.

மாலை மலர்

புதுச்சேரி:

வில்லியனூர் அன்னை நகரில் 4 நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவருமான சிவாவிடம் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் புகார் அளித்தனர்.

உடனடியாக அன்னை நகருக்கு பொது பணிதுறை அதிகாரிகளுடன் நேரில் சென்ற எதிர்க்கட்சி தலைவர் குடிநீர் பிரச்சனையை போக்குவதற்குரிய வழிமுறைகளை ஆய்வு செய்தார். அப்போது குடிநீர் விநியோகத்தில் போதிய அழுத்தம் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது.

அதனை போக்குவதற்கு கம்பிரசர் மூலம் உந்தப்பட்டு குடிநீர் விநியோகம் சீர் செய்யப்பட்டது. மேலும், அப்பகுதியில் குடிநீர் தொடர்ந்து தட்டுப்பாடு ஏற்படாதவாறு ஆழ்துளை கிணறு அமைக்கவும் ஏற்பாடு செய்யுமாறு அதிகாரிகளிடம் எதிர்க்கட்சித் தலைவர் சிவா ஆலோசனை வழங்கினார்.