ஊர்வலம் சென்ற காட்சி. 
புதுச்சேரி

பொதுப்பணித்துறை பணிநீக்க ஊழியர்கள் ஊர்வலம்

போலீசாருடன் தள்ளுமுள்ளுபொதுப்பணித்துறை தலைமை என்ஜினியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு அதன் நுழைவுவாயில் மீது ஏறி தற்கொலை மிரட்டல் போராட்டம் நடத்தினர்.

மாலை மலர்

புதுச்சேரி:

புதுவை பொதுப்பணித்துறையில் 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு ஆயிரக்கணக்கான வவுச்சர் ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர்.

இவர்களை தேர்தல் கமிஷன் பணியில் இருந்து நீக்கியது. ஊழியர்கள் மீண்டும் பணி வழங்கக் கோரி பல கட்ட போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்தவாரத்தில் பொதுப்பணித்துறை தலைமை என்ஜினியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு அதன் நுழைவுவாயில் மீது ஏறி தற்கொலை மிரட்டல் போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில் இன்று அண்ணாசிலை அருகே ஒன்று கூடினர். அங்கிருந்து அண்ணாசாலை, நேருவீதி, மிஷன்வீதி, ஜென்மராக்கினி கோவில் வீதி வழியாக சட்டசபை நோக்கி வந்தனர். அவர்களை போலீசார் ஆம்பூர் சாலையில் பேரிகார்டு அமைத்து தடுத்து நிறுத்தினர். போலீசாருடன் அவர்கள் வாக்குவாதம் செய்தனர். இதனால் தள்ளு, முள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து அவர்கள் அங்கு மீண்டும் பணி வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.