மாநில அளவில் நடைபெற்ற ஹாக்கி போட்டியில் பரிசு பெற்ற மாணவர்கள். 
புதுச்சேரி

புதுவை மாணவர்கள் சாதனை

வில்லியனூர் ஆச்சார்யா கல்லூரியில் மாநில அளவிலான ஹாக்கி விளையாட்டு போட்டி நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

புதுச்சேரி:

வில்லியனூர் ஆச்சார்யா கல்லூரியில் மாநில அளவிலான ஹாக்கி விளையாட்டு போட்டி நடைபெற்றது.

இப்போட்டியில் புதுவை, காரைக்கால், மாகி, ஏனாம் பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

விழாவில் ஆச்சார்யா கல்வி குழும தலைவர் அரவிந்தன் மற்றும் கல்லூரி என்ஜினீயரிங் விளையாட்டு குழு இயக்குனர் குமரேசன் ஆகியோர் முன்னிலையில் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

மடுகரை ராமமூர்த்தி அரசு உயர்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் செந்தில் மற்றும் கூடப்பாக்கம் உடற் கல்வி விரிவுரையாளர் ராமச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT