கொலை செய்யப்பட்ட தமிழ்ச்செல்வன். 
புதுச்சேரி

புதுச்சேரியில் வாலிபர் வெட்டிக் கொலை

கொலையாளிகளை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

கொலை சம்பவம் காரணமாக வாணரப்பேட்டை பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. அங்கு அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

புதுச்சேரி ரோடியர்பேட் பகுதியை சேர்ந்தவர் தமிழ் செல்வன் (வயது 34).

காதல் திருமணம்

இவர் உப்பளம் நேதாஜி நகரை சேர்ந்த பிரெஞ்சு குடியுரிமைபெற்ற சுயம்பு என்ற பென்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 4 வயதில் பெண் குழந்தை உள்ளது.

சுயம்பு கடந்த சில ஆண்டுகளாக புதுச்சேரியில் பியூட்டி பார்லர் நடத்தி வந்தார். அதன் பிறகு அவர் பிரான்ஸ் நாட்டுக்கு சென்று அங்கு வேலை பார்த்து வருகிறார். தற்போது அவர் 4 மாத கர்ப்பிணியாக உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சுயம்பு புதுவை வந்தார். பின்னர் மீண்டும் அவர் பிரான்சுக்கு சென்றார்.

தமிழ்செல்வன்

தமிழ்செல்வன் தனது குழந்தையுடன் உப்பளம் நேதாஜிநகரில் உள்ள தனது மாமியார் வீட்டில் வசித்து வந்தார். நேற்று இரவு தமிழ்செல்வன் நண்பர்களுடன் மது அருந்திவிட்டு இரவு 11 மணியளவில் பைக்கில் மாமியார் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.

வெட்டிக்கொலை

வாணரப்பேட்டை மெயின்ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு கும்பல் அவரை வழிமறித்து கத்தி, அரிவாளால் வெட்டியது. குறிப்பாக முகத்தை குறி வைத்து சரமாரியாக வெட்டினர். இதில் அவரது ஒரு காது துண்டானது. முகம் மற்றும் தலையில் பலத்த வெட்டுக் காயமடைந்த தமிழ்ச்செல்வம் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவர் இறந்ததை உறுதி செய்த பின்னரே அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது.

இதுகுறித்து அறிந்த தமிழ்செல்வனின் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் தமிழ்செல்வனின் உடலை பார்த்து கதறி அழுதனர். கொலை நடந்த சம்பவம் குறித்து முதலியார்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரியவந்தது.

உடலை கைபற்ற எதிர்ப்பு

போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்ற முயன்றனர். அப்போது தமிழ்செல்வனின் உறவினர்கள் அங்கு திரண்டு வந்து ஆம்புலன்சை மறித்து உடலை எடுக்க விடாமல் தடுத்தனர்.

வாலிபரை பிடித்து விசாரணை

குற்றவாளிகளை கைது செய்த பின்னரே உடலை எடுக்க வேண்டும் அவர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் அவர்களை சமாதானம் செய்தனர். பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை தொடர்பாக முதலியார்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தமிழ்செல்வன் மீது எந்த வித வழக்கும் இல்லை என்பது தெரியவந்தது.

அதே வேளையில் தமிழ்செல்வனின் மைத்துனர் அடிக்கடி அடிதடி சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் அதனை தமிழ்செல்வன் சமாதானம் செய்து பிரச்சினையை தீர்த்து வைப்பது வழக்கமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தின் பின்னணியில் தமிழ்செல்வன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். கொலையாளிகளை கைதுசெய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பாக வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசார் குவிப்பு

இந்த கொலை சம்பவம் காரணமாக வாணரப்பேட்டை பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. அங்கு அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்செல்வன் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து பிரான்சில் உள்ள அவரது மனைவிக்கு உறவினர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அவர் புதுச்சேரிக்கு விரைந்துள்ளார்.

SCROLL FOR NEXT