புதுவை மாநில தி.மு.க.செயற்குழுக் கூட்டம் நாளை மறுநாள் புதன்கிழமை மாலை 4 மணி அளவில் ப சித்தன்குடி ஜெயராம் திருமண மண்டபத்தில் நடக்கிறது.
தேர்தல் பொறுப்பாளர், கழக கொள்கைப் பரப்புச் செயலாளர் எஸ். ஜெகத்ரட்சகன் எம்.பி., தலைமை தாங்குகிறார. அதுசமயம், புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த மாநில கழக நிர்வாகிகள், முன்னாள், இந்நாள் சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், தொகுதி கழகச் செயலாளர்கள், நிர்வாகிகள், சார்பு அணிகளின் அமைப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு மாநில அமைப்பாளர் சிவா கேட்டுக்கொண்டுள்ளார்.
கூட்டத்தில் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது, கழக ஆக்கப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது. மேலும் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை எடுத்து கூறி விவாதிக்கப்படுகிறது.