புதுச்சேரி

VIDEO : "பஞ்சுமா டி-சர்ட் வாங்கோ! நரோடோ ஜெர்சி இருக்கு!" - புதுச்சேரி செல்வி அக்கா ரீல்ஸ் சமூக வலைதளங்களில் கலக்கல்

அவ்ளோதான்! ரீல்ஸ் தீயா பரவிடுச்சு..1 மில்லியன் வியூஸை தாண்டி செல்வி அக்கா செலபிரிட்டி ஆயிட்டாங்க.

நைனார்மண்டபத்துல பனியன் கடை வச்சிருந்த செல்வி அக்கா, இன்னைக்கு புதுச்சேரியோட "கால்பந்து காமெடி குயின்" ஆயிட்டாங்க!

விஷயம் என்னனா... உலக கோப்பை நடக்குது. கால்பந்து நட்சத்திர வீரர்களின் பெயர், எண், நாடு பொறித்த டி-சர்ட் விக்க செல்வி அக்கா கூவ ஆரம்பிச்சாங்க. ஆனா வாயில நுழையாத பெயரு எல்லாம் அக்கா வாயில திருகி விழுந்துருச்சு.

பென்சிமா → பஞ்சுமா

ரோனால்டோ → நரோடோ

பெக்கம் → பி.காம்

லமின் யமல் → லட்சுமி அம்மாள்

மெஸ்ஸி → லெசி

சுற்றுலா பயணிங்க "அக்கா இது என்ன பேரு?"னு சிரிச்சுகிட்டே வீடியோ எடுத்து போட... அவ்ளோதான்! ரீல்ஸ் தீயா பரவிடுச்சு..1 மில்லியன் வியூஸை தாண்டி செல்வி அக்கா செலபிரிட்டி ஆயிட்டாங்க.

நெட்டிசன்ஸ் கமெண்ட்:

"அக்கா நீங்க பந்து அடிக்கல... பெயர அடிச்சு ஆட்டம் காட்டுறீங்க!"

ஆனா செல்வி அக்கா சளைக்கல. "எனக்கு திறமை இருக்கு, பாலோயர்ஸ் இருக்காங்க, வாய் வலிக்குது ஆனா வியாபாரம் ஜோரா போகுது"னு தைரியமா பேட்டி குடுக்குறாங்க.

இப்போ நிலைமை:

கேரளா, கர்நாடகா மட்டுமில்ல... பிரான்ஸ், அமெரிக்கா காரங்க கூட "பஞ்சுமா டி-சர்ட் இருக்கா?"னு கடைய தேடி வராங்களாம். மொத்துல படிக்காத பேர கூட படிச்சு காட்டிட்டாங்க செல்வி அக்கா. புதுச்சேரிக்கு புது பிராண்ட் அம்பாசிடர் கிடைச்சாச்சு!