புதுச்சேரி

புதுச்சேரி ரவுடி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

புதுச்சேரி ரவுடி கொலை வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி பாக்கு முடையான்பேட் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் என்ற முண்டக்கண்ணு ஆனந்த் (வயது31). ரவுடியான இவரை கடந்த மாதம் 18-ந் தேதி, 8 பேர் கொண்ட கும்பல், லாஸ்பேட்டை இ.சி.ஆர். சாலையில் தனியார் திருமண மண்டபம் அருகே கொடூரமாக வெட்டி கொலை செய்தது.

8 பேர் கைது

இதுதொடர்பாக லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து கருவடிக்குப்பம் சந்துரு, நாகராஜ் மற்றும் மதுரை கூலிப் படையை சேர்ந்த 3 பேர் உள்பட 8 பேரை கைது செய்தனர். முன்னாள் ஐ.ஆர்.பி.என்., போலீஸ்காரர் ஜெகன், எட்வின் பால் ஆகியோர் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

மேலும் ஒருவர் கைது

இதையடுத்து, அவர்கள் 10 பேரையும், கோர்ட் அனுமதியுடன் போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர். விசாரணையில் ஆனந்த் கொலையில், முத்தியால்பேட்டையை சேர்ந்த தினேஷ் குமார் (25) என்பவர், உளவு பார்த்தது தெரிய வந்தது. இதையடுத்து தினேஷ் குமாரை லாஸ்பேட்டை போலீசார் கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர்.

SCROLL FOR NEXT