புதுச்சேரி

புதுச்சேரிக்கு வருகை தரும் வெளிநாட்டு பறவைகள்

நீர்நிலைகளில் நீர் உயர்ந்து வருவதால், நீர்நிலைகளை தேடி வரும் பறவைகளின் எண்ணிக்கையும் அதிகமாகி வருகிறது.

விழுப்புரம், செஞ்சி, திண்டிவனம் போன்ற பகுதிகளில் பெய்யும் மழையால் வரும் நீரில் இந்த உணவுகள் அதிக அளவில் வருவதால், நத்தைக்குத்தி நாரைகள் இங்கு விரும்பி வருகின்றன.

புதுச்சேரியில் கடந்த 16-ந் தேதி 2 மணி நேரம் கனமழை பெய்தது.

நீர்வரத்து அதிகரிப்பு

அதனை தொடர்ந்து இரவில் மட்டும் லேசான மழை பெய்து வருகிறது. இதனால் சங்கராபரணி ஆறு மற்றும் தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.

நீர்நிலைகளில் நீர் உயர்ந்து வருவதால், நீர்நிலைகளை தேடி வரும் பறவைகளின் எண்ணிக்கையும் அதிகமாகி வருகிறது. செல்லிப்பட்டு உடைந்த படுகை அணையை கடந்து செல்லும் சங்கராபரணி ஆற்றில் அதிக அளவில் நத்தைக்குத்தி நாரைகள் வரத் தொடங்கியுள்ளன.

திண்டிவனம்

இந்த நத்தைக்குத்தி நாரைகள், நன்னீர் நத்தைகள், தவளைகள், நண்டுகள் மற்றும் சிறு மீன்களை முதன்மை உணவாக கொள்கின்றன. விழுப்புரம், செஞ்சி, திண்டிவனம் போன்ற பகுதிகளில் பெய்யும் மழையால் வரும் நீரில் இந்த உணவுகள் அதிக அளவில் வருவதால், நத்தைக்குத்தி நாரைகள் இங்கு விரும்பி வருகின்றன.

இந்திய துணைக்கண்டம் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள ஏரிகள், குளங்கள், சதுப்புநிலங்கள் போன்ற நீர்நிலைகளில் கூட்டமாக வாழும் இந்த பறவைகள் இனப்பெருக்க காலங்களில் தமிழகம் - புதுச்சேரி பகுதிகளில் அதிகம் காணப்படுகின்றன.

SCROLL FOR NEXT