புதுச்சேரி

புதுச்சேரி: பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

அதிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மற்றும் கரைகாலில் கனமழை எச்சரிக்கை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை எதிரொலி காரணமாக புதுச்சேரியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், அனைத்து கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அமைச்சர் நமச்சிவாயம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

அப்பகுதிகளில் அதிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT