நாளை தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி புதுவை தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரி மக்கள் அனைவருக்கும் எனது அன்பான “தீபாவளி“ நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒளிமயமான தீபாவளி பண்டிகை, நாட்டு மக்களிடையே ஒற்றுமையை- சகோரத்துவத்தை பலப்படுத்துகிறது. இந்த தீபாவளி நம் அனைவரது வாழ்விலும் ஒளிமயமான எதிர்காலத்தை, மகிழ்ச்சியைக் கொண்டு வருவதாக அமையட்டும்.
தீபாவளி பண்டிகையையொட்டி புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
இருளை அகற்றி ஒளியை பரப்பும் தீபாவளி திருநாள், நம் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும், வளத்தையும் கொண்டுவரட்டும். இல்லங்கள்தோறும் ஏற்றப்படும் தீபங்கள், அன்பையும், அறத்தையும் வளர்த்து, அமைதியும், ஒற்றுமையும் நிலைக்க வழி வகுக்கட்டும்.
இந்த நன்னாளில் ஏழை எளிய மக்களுடன் நம் மகிழ்ச்சியை பகிர்ந்து, உதவி தேவைப்படுவோருக்கு உறுதுணையாக இருப்போம். சாதி, மத வேறுபாடுகளை கடந்து சகோதர உணர்வுடன் ஒன்றிணைந்து வளமான புதுவையை உருவாக்க உறுதியேற்போம். பொதுமக்கள், குழந்தைகள், முதியோர் பாதுகாப்புடன் திருநாளை கொண்டாட வேண்டும்.
அன்பும், மகிழ்ச்சியும் அனைவரின் வாழ்வில் தீபாவளி ஒளி போல என்றும் பிரகாசிக்க எனது இதயங்கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். இருள் நீங்கி ஒளி பெருகும் தீபாவளி திருநாள் போன்று, அனைவரின் வாழ்வில் வறுமை, கவலைகள், அறியாமை, பகைமை, விலகி அன்பு அறிவு, ஆற்றல், திறமை அமைதி செல்வம், மகிழ்ச்சி, உள்ளிட்ட அனைத்தும் கிடைத்திட வேண்டும்.
இந்த இனிய தீபாவளி திருநாளில் ஏழை, எளிய மக்களின் இல்லங்களில் மகிழ்ச்சி மலரவும், விவசாயிகளின் வாழ்வில் வளம் பெருகவும், இளைஞர்களின் கனவுகள் நனவாகவும், பெண்களின் வாழ்வாதாரம் உயரவும், தொழில் வளர்ச்சியால் வேலைவாய்ப்புகள் பெருகவும் மனதார வாழ்த்துகிறேன்.
தீமை அழிந்து நன்மை தழைத்திடவும், இருள் நீங்கி ஒளி பிறந்திடவும் கொண்டாடப்படும் தீபாவளித் திருநாளில், புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த அனைத்து மக்களுக்கும் எனது இதயம் கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த தீபாவளித் திருநாள் ஒவ்வொரு இல்லத்திலும் மகிழ்ச்சியையும், ஒவ்வொரு குடும்பத்திலும் அமைதியையும், ஒவ்வொரு தனிமனிதரின் வாழ்விலும் முன்னேற்றத்தையும், செழிப்பையும் கொண்டு வரட்டும்.
இருள் நீங்கி ஒளி பிறக்கும் நன்னாளாம் தீபாவளித் திருநாளைக் கொண்டாடும் புதுச்சேரி மாநில மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அறியாமை மற்றும் ஆணவம் ஆகிய இருளை அகற்றி, அன்பு, அமைதி மற்றும் சகோதரத்துவம் எனும் தீப ஒளியை ஏற்றி வைக்கும் இத்திருநாள், ஒவ்வொருவரின் வாழ்விலும் புதிய நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் விதைக்கட்டும்.
தீயவர்களை அழித்து நல்லவர்கள் நிலை நிற்கும்போது மக்கள் மகிழ்ச்சி கொள்வார்கள் என்பதை தீபாவளி எடுத்துக்காட்டுகிறது. தீபாவளி திருநாள் இருளை அகற்றி புதுவை மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் திருநாளாகவும், மங்காத செல்வங்களை கொண்டு சேர்க்கும் இனியநாளாகவும் அமையட்டும்.
மனதின் ஒளியை மறைக்கும் ஆணவம், கோபம், பொறாமை போன்ற தீய எண்ணங்கள் விலகி ஞான ஒளி அனைவர் மனதிலும் உருவாகட்டும். தீபாவளியை பாதுகாப்புடன் கொண்டாட அனைவருக்கும் தீபாவளி திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
இதேபோல் எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.டி.ஆறுமுகம், அசோக் ஆனந்த், நேரு, முன்னாள் எம்.பி. பேராசிரியர் ராமதாஸ் ஆகியோரும் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளனர்.