30 தொகுதிகளை கொண்ட புதுச்சேரி சட்டமன்றத்திற்கு கடந்த ஏப்ரல் 9-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது.
புதுவை தட்டாஞ்சாவடி தொகுதியில் முதலமைச்சர் ரங்கசாமி போட்டியிட்டார். அவரை எதிர்த்து மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்பி போட்டியிட்டார்.
இந்த தொகுதியின் முடிவுகள் புதுவை மக்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இதில் 4 ஆயிரத்து 441 ஓட்டு வித்தியாசத்தில் முதலமைச்சர் ரங்கசாமி வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட வைத்திலிங்கம் 4வது இடத்துக்கு தள்ளப்பட்டார். தவெகவுடன் கூட்டணி அமைத்து நேயம் மக்கள் கழகம் சார்பில் போட்டியிட்ட விநாயம் 2ம் இடம் பிடித்தார். 3வது இடத்தை சுயேட்சையாக போட்டியிட்ட சேதுசெல்வம் பிடித்தார்.
மொத்த ஓட்டுகள்: 26,603
பதிவான ஓட்டுகள்: 23,172
ஓட்டு சதவீதம் 87.1%
ரங்கசாமி (என்ஆர்.காங்கிரஸ்): 10,024
வைத்திலிங்கம்(காங்கிரஸ்): 2,990
விநாயகம் (தவெக கூட்டணி): 5,583
கார்த்திகுமாரி (நாதக): 534
சேதுசெல்வம்(சுயே): 3,984
நோட்டா: 196