30 தொகுதிகளை கொண்ட புதுச்சேரி சட்டமன்றத்திற்கு கடந்த ஏப்ரல் 9 அன்று வாக்கு பதிவு நடைபெற்றது.
வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வரும் சூழலில் காலை 10 மணி நிலவரப்படி ஆளும் என்ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணி 16 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
காங்கிரஸ் 5 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு படியும் தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரப்படியும் முதல்வர் ரங்கசாமி தலமையிலான என்ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிப்பது ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டுள்ளது.