ரிசர்வ் வங்கி 
புதுச்சேரி

புதுச்சேரி கூட்டுறவு வங்கி 6 மாதம் முடக்கம்- ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை

நிலையான வைப்பு நிதி உள்ளிட்ட எந்தவிதமான பணத்தையும் பொதுமக்கள் எடுக்க முடியாமல் பரிதவிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

வங்கியின் ஒட்டுமொத்த நிர்வாகம் மற்றும் பணப்பரிவர்த்தனைகள் அடுத்த 6 மாத காலத்திற்கு முழுமையாக முடக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி நேரு வீதியில் கூட்டுறவு நகர வங்கி செயல்பட்டு வருகிறது. அரசு ஊழியர்கள் தங்களின் சம்பள அடிப்படையிலேயே இங்கு எளிதாகக் கடன் பெற்று திருப்பி செலுத்தி வந்தனர்.

வங்கிக்கு சீல் வைப்பு

இந்த நிலையில் நேற்று மாலை 3 மணியளவில் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் குழு, அங்கு அதிரடி சோதனை நடத்தினர். அப்போது வங்கியின் வரவுசெலவு உள்ளிட்ட ஒட்டுமொத்த நிதி நிலவரத்தை அலசி ஆராய்ந்தனர். அதில் வங்கியின் தற்போதைய நிலை ஆபத்தான கட்டத்தில் இருப்பதை உறுதி செய்தனர்.

சீல்

இதனையடுத்து எந்த விதமான புதிய ஆவணப் பரிமாற்றங்களும் செய்ய முடியாதவாறு வங்கியை முழுமையாக முடக்கி சீல் வைத்தனர்.

இதுமட்டுமின்றி, வங்கி நிர்வாகத்தின் முறைகேடுகள் அல்லது நிதி வீணடிப்பு குறித்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

முடக்கம்

ரிசர்வ் வங்கியின் இந்த திடீர் நடவடிக்கையால் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களும், கணக்குதாரர்களும் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.

வங்கியின் ஒட்டுமொத்த நிர்வாகம் மற்றும் பணப்பரிவர்த்தனைகள் அடுத்த 6 மாத காலத்திற்கு முழுமையாக முடக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள்

இருப்பினும் இந்த முடக்கப்பட்ட காலகட்டத்தில் வாடிக்கையாளர்கள் படும் துயரைக் குறைக்கும் வகையில் கணக்கு வைத்துள்ள ஒவ்வொரு

வரும் அவசரத் தேவைகளுக்காக அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் வரை மட்டுமே பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நிலையான வைப்பு நிதி உள்ளிட்ட எந்தவிதமான பணத்தையும் பொதுமக்கள் எடுக்க முடியாமல் பரிதவிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

SCROLL FOR NEXT