புதுச்சேரி

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்

சட்டசபை தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிடுவதற்காக புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல் செய்தார்.

மாலை மலர்

புதுச்சேரியில் மொத்தமுள்ள 30 தொகுதிகளுக்கும் ஏப்.9-ந்தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. வேட்புமனு தாக்கல் 23-ந்தேதி வரை நடக்கிறது.

இந்நிலையில் சட்டசபை தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிடுவதற்காக புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல் செய்தார்.

தட்டாஞ்சாவடி மற்றும் மங்கலம் சட்டசபை தொகுதியில் போட்டியிடுவதற்காக அவர் வேட்புமனு தாக்கல் செய்தார்.

என்.ஆர். காங்கிரஸ் - பா.ஜ.க. கூட்டணியில் இழுபறி நீடித்து வரும் நிலையில் கூட்டணி தொடர்கிறதா? இல்லையா? என்பதை அறிவிக்காமலே வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.