புதுச்சேரி

புதுச்சேரி- வீட்டுக்கு வெளியே பூ ஜாடி வைத்திருப்பவர்களே உஷார்

பூ ஜாடிகள் திடீர்னு காணாம போயிடுச்சு..

கள்ளத்தனமா இல்ல... ரொம்ப கேஷுவலாக சொந்த செடியை தூக்கிட்டு போற மாதிரி, "இது என்னோடது தான் பாஸ்"னு ஒரு ஸ்டைலோட தூக்கிட்டு போயிருக்காரு.

வழக்கமாக வீடுகளில் புகும் திருடர்கள் நகை, பணம், வெள்ளி பொருட்கள் என விலை உயர்ந்த பொருட்களை திருடி செல்வர்.

சில நேரங்களில் வீட்டுக்கு வெளியே நிற்கும் பைக்குகள், சைக்கிள், ஜெனரேட்டர் போன்றவையும் திருட்டு போகும். ஆனால் புதுவையில் இப்போ ட்ரெண்டே மாறிப்போச்சு. வீட்டுக்கு வெளியே வைக்கும் பூ ஜாடிக்கே ஆபத்து வந்துடுச்சு.

பூ ஜாடிகள்

புதுவை எல்லைப்பிள்ளை சாவடி, மெயின் ரோட்டில், 100 அடி சாலையில் ஒரு வீட்டு வாசலில் அழகா, குண்டு குண்டா வச்சிருந்த பூ ஜாடிகள் திடீர்னு காணாம போயிடுச்சு..

வீட்டுக்காரர் காலையில எழுந்து பார்த்தா, "அடடா... நேத்து இங்க இருந்த பூச்செடி எங்கே? பூ ஜாடி எங்கே? செடி காத்துல பறந்து போயிருக்குமா? இல்ல பூவுக்கு கால் முளைச்சு நடந்து போயிருக்குமா?" ன்னு ஷாக் ஆயிட்டாரு..!!உடனே வீட்டுக்கு வெளியே உள்ள சி.சி.டி.வி.யை போட்டு பார்த்தா தான் தெரிஞ்சுது நள்ளிரவுல ஒரு மர்ம நபர், ஆள் நடமாட்டம் இல்லாத நேரமா பார்த்து, வீட்டு வாசல்ல இருந்த பூ ஜாடியை அப்படியே தூக்கிக்கிட்டு போறாரு..!

சமூக வலைதளம்

அதுவும் கள்ளத்தனமா இல்ல... ரொம்ப கேஷுவலாக சொந்த செடியை தூக்கிட்டு போற மாதிரி, "இது என்னோடது தான் பாஸ்"னு ஒரு ஸ்டைலோட தூக்கிட்டு போயிருக்காரு.

இந்த வீடியோ இப்போ சமூக வலைதளத்துல செம வைரல்.

வழக்கமா "சார், செயின் பறிச்சிட்டாங்க, பைக் காணோம்"னு கம்ப்ளைன்ட் வரும். இப்போ "சார், என் வீட்டு பூ ஜாடியை காணோம்"னு வந்தா, போலீஸ் என்ன பண்ணுவாங்க?

"பூ ஜாடி திருடனை பிடிக்க தனிப்படை அமைக்கணுமோ?"ன்னு அந்த பகுதி மக்கள் கலாய்க்கிறாங்க..

SCROLL FOR NEXT