புதுச்சேரி

Puducherry Election 2026: காங்கிரஸ்- தி.மு.க. இடையே தொகுதி பங்கீடு உடன்பாடு ஏற்பட்டது

வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில் காங்கிரஸ்- திமுக இடையே தொகுதி பங்கீடு உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக ஜெகத்ரட்சகன் தெரிவித்துள்ளார்

மாலை மலர்

30 தொகுதிகளை கொண்ட புதுச்சேரி சட்டசபைக்கு அடுத்த மாதம் 9-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இன்றுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைந்த நிலையில், காங்கிரஸ்- தி.மு.க. இடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது என்று ஜெகத்ரட்சகன் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ்க்கு 16 இடங்களும், திமுக-வுக்கு 14 இடங்களிலும் ஒதுக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்த ஜெகத்ரட்சகன், கூட்டணி கட்சிகளுக்கு 14 இடங்களிலில் இருந்து பிரித்து கொடுக்கப்படும் என்றார்.

மனுதாக்கல் செய்ய கடைசி நாளான இன்று வரை, தொகுதி உடன்பாடு ஏற்படாததால் 30 தொகுதிகளிலும் திமுக மற்றும் காங்கிரஸ் தனித்தனியே வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தொகுதிகள் முடிவு செய்யப்பட்ட பின்னர், காங்கிரஸ்க்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளும், திமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில் காங்கிரசும் வேட்புமனுவை திரும்பப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.