தமிழ்நாட்டைப் போலவே புதுச்சேரியிலும் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிவருகிறது. இதனையொட்டி புதுச்சேரி அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கமாக இணைந்து 2 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக இன்று வேட்பாளர்களை அறிவித்தது. அதன்படி உப்பளம் தொகுதியில் கட்சியின் மாநிலச் செயலாளர் மற்றும் முன்னாள் எம்எல்ஏ ஏ. அன்பழகம் நிறுத்தப்பட்டுள்ளார். உருளையன்பேட்டை தொகுதியில் ஏ. காந்தி நிறுத்தப்பட்டுள்ளார்.
தேர்தலில் கூட்டணி வெற்றி பெற்றால், புதுச்சேரி அமைச்சரவையில் அதிமுக பங்கு கேட்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சூழலில் சீட் ஒதுக்கப்படாத நிலையில் புதுச்சேரி அதிமுக துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் கட்சியிலிருந்து விலகியுள்ளார். அத்துடன் முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து என்.ஆர்.காங்கிரஸில் தன்னை இணைத்துக்கொண்டார்.