தமிழகத்தில் ஒரு பைசா லஞ்சம் இல்லாமல் மக்கள் பணி நடக்கிறது. இதே போன்று புதுச்சேரியிலும் அமைய வேண்டும்.
மதசார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணி புதுச்சேரி பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் எம்பி பிரவீன் சக்கரவர்த்தி பேசியதாவது:-
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் மட்டும் ஏற்பட வில்லை. அரசியல் மாற்றமும் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரு பைசா லஞ்சம் இல்லாமல் மக்கள் பணி நடக்கிறது. இதே போன்று புதுச்சேரியிலும் அமைய வேண்டும்.
150 நாட்களில் இது என்ன தமிழ்நாடா... சிங்கப்பூரா... என மக்கள் கேட்கிறார்கள்.. அந்த மாற்றம் புதுச்சேரியிலும் ஏற்பட வேண்டும்..அதற்கு பிள்ளையார் சுழி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்.
தமிழகத்திலும் புதுச்சேரியிலும் பெரும்பாலான காங்கிரஸ் தலைவர்கள் த.வெ.க.வுடன் கூட்டணியை விரும்பினார்கள். தேசிய கட்சியான காங்கிரசுக்கு ஒரு முடிவு எடுக்க பல நிபந்தனைகள், பல கட்டாயங்கள் உள்ளன. அதனால் கூட்டணி ஏற்படவில்லை. தமிழகத்தில் த.வெ.க. வெற்றி பெற்ற போது ராகுல் காந்தி போன் செய்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது உங்களது ஆதரவு தேவை என விஜய் கேட்டார். அதன் பிறகு தான் த.வெ.க.வுடன் கூட்டணி அமைந்தது. அந்த ஒரு தொலைபேசி அழைப்பு தமிழகத்தில் 70 ஆண்டுகள் இல்லாத வகையில் கூட்டணி ஆட்சியாக அமைந்தது.
இவ்வாறு பிரவீன் சக்கரவர்த்தி பேசினார்.