கோப்பு படம். 
புதுச்சேரி

திருக்காஞ்சி கெங்கைவராக நதீஸ்வரர் கோவிலில் பவுர்ணமி கிரிவலம்

கெங்கைவராக நதீஸ்வரர் கோவிலை பக்தர்கள் 11 முறை சுற்றி கிரிவலம் செல்கின்றனர்.கிரிவல ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், ஆலய குருக்கள் செய்துள்ளனர்.

மாலை மலர்

புதுச்சேரி:

வில்லியனூர் திருக்காஞ்சியில் உள்ள கெங்கைவராக நதீஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி விழா நடத்தப்படுகிறது.

ஆவணி மாத பவுர்ணமியான  புதன்கிழமை மாலை 6 மணிக்கு பவுர்ணமி கிரிவலம் தொடங்குகிறது. கெங்கைவராக நதீஸ்வரர் கோவிலை பக்தர்கள் 11 முறை சுற்றி கிரிவலம் செல்கின்றனர்.

இரவு 8.30 மணிக்கு கோவில் மூலவர் கோபுரத்தின் அருகே பவுர்ணமி தீபம் ஏற்றப்பட்டு பக்தர்கள் தரிசனம் நடக்கிறது. கிரிவல ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், ஆலய குருக்கள் செய்துள்ளனர்.