விடுதலை சிறுத்தை கட்சி விழுப்புரம் கிழக்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்ட வீர. பொன்னிவளவனுக்கு அக்கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். 
புதுச்சேரி

விழுப்புரம் கிழக்கு மாவட்ட செயலாளராக பொன்னிவளவன் நியமனம்

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதைவீர. பொன்னிவளவனுக்கு கட்சியினர் ஆளுய மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

மாலை மலர்

புதுச்சேரி:

விழுப்புரம் கிழக்கு மாவட்டமான வானூர், கண்ணமங்கலம், கோட்டகுப்பம் ஒருங்கிணைந்த பகுதியின் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளராக வீர.பொன்னிவளவன் நியமிக்கப்பட்டார்.

அவர் திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். வீர. பொன்னிவளவன் மாவட்ட செயலாளராக பொறுப்பேற்றதையடுத்து அக்கட்சியினர் திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். வீர. பொன்னிவளவனுக்கு கட்சியினர் ஆளுய மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் தொகுதி துணை செயலாளர் நல்லாவூர் அன்பரசு, இளைஞரணி மாநில துணைச் செயலாளர் இளங்கோவன், வழக்கறிஞர் நாகராஜன், தமிழ்ச்செல்வன், ஈழத்தமிழன், ராமதாஸ், கலைமாறன், தங்கராசு, ஆதிமுத்துராம், வீரப்புதல்வன், நீதிதேவன், மோகன், வெங்கடேசன், ஜான், தட்சிணாமூர்த்தி சத்தியமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.