புதுச்சேரி

திருக்கனூரில் வாக்குச்சாவடி அருகே பிரசாரம் செய்த இந்தியா கூட்டணி கட்சியை சேர்ந்த 4 பேர் மீது போலீசார் வழக்கு

சம்பவ இடத்திற்கு வந்த திருக்கனூர் போலீசார் வாக்குசாவடி அருகே தகராறில் ஈடுபட்டு கொண்டிருந்தவர்கள் மீது தடியடி நடத்தி கலைந்து போக செய்தனர்.

புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நேற்று முன்தினம் நடந்தது.

மண்ணாடிப்பட்டு தொகுதி திருக்கனுார் வாக்கு சாவடியின் அருகே பிரசாரம் செய்தது தொடர்பாக பாஜக- இந்தியா கூட்டணி கட்சியினர் இடையே தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த திருக்கனூர் போலீசார் வாக்குசாவடி அருகே தகராறில் ஈடுபட்டு கொண்டிருந்தவர்கள் மீது தடியடி நடத்தி கலைந்து போக செய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக திருக்கனுார் போலீசார் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக இந்தியா கூட்டணியை சேர்ந்த திருக்கனுார் அண்ணாதுரை, ராஜி, பிரகாஷ், செந்தில்வேலன் உட்பட மேலும் பலர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.