புதுச்சேரி

NDA வேட்பாளர்களை ஆதரித்து புதுச்சேரியில் பிரதமர் மோடி 3-ந்தேதி ரோடு ஷோ

எதிர்க்கட்சி கூட்டணியில் தி.மு.க.- காங்கிரசில் யார் தலைமை என்பதில் இன்னும் பிரச்சனை போய் கொண்டிருக்கிறது.

மாலை மலர்

புதுச்சேரி மாநில பா.ஜ.க. சார்பில் மறைமலையடிகள் சாலையில் ஊடக மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதனை பா.ஜ.க. புதுச்சேரி தேர்தல் பொறுப்பாளரும், மத்திய மந்திரியுமான மன்சுக் மாண்டவியா திறந்து வைத்தார்‌.

விழாவில் பா.ஜ.க. மாநில தலைவர் வி.பி. ராமலிங்கம், அமைச்சர் நமச்சிவாயம், சபாநாயகர் ஏம்பலம் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து பா.ஜ.க. மாநில தலைவர் வி.பி.ராமலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது:-

எங்கள் கூட்டணி சிறப்பாக அமைந்து, நல்ல படியாக சென்று கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சி கூட்டணியில் தி.மு.க.- காங்கிரசில் யார் தலைமை என்பதில் இன்னும் பிரச்சனை போய் கொண்டிருக்கிறது.

பா.ஜ.க. சார்பில் நிறுத்தப்பட்ட 10 வேட்பாளர்கள் தாக்கல் செய்த மனு, தேர்தல் கமிஷனால் ஏற்கப்பட்டுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய பிரதமர் மோடி வருகிற 3-ந்தேதி புதுச்சேரிக்கு வருகிறார்.

புதுச்சேரி நகர பகுதியில் நடைபெறும் ரோடு ஷோவில் பிரதமர் பங்கேற்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கிறார். மேலும் புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய வருகிற 27-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை மத்திய மந்திரி அமித்ஷா, பா.ஜ.க. தேசிய தலைவர் நிதின் நபின், முன்னாள் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் வருகை தரவுள்ளனர். அவர்கள் வேட்பாளர்களை ஆதரித்து பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.