கோப்பு படம். 
புதுச்சேரி

பிளஸ்-1 வகுப்பு 19-ந் தேதி தொடக்கம்

அரசு பள்ளிகளில் பிளஸ்-1 மாணவர் சேர்க்கைக்கு கடந்த 26-ந் தேதி விண்ணப்பம் வழங்கப்பட்டது.தரவரிசை பட்டியல் 12-ந் தேதி வெளியிடப்பட்டு நேர்காணல் மூலம் மாணவர் சேர்க்கை நடக்கிறது.

புதுச்சேரி:

அரசு பள்ளிகளில் பிளஸ்-1 மாணவர் சேர்க்கைக்கு கடந்த 26-ந் தேதி விண்ணப்பம் வழங்கப்பட்டது.

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை இன்று மாலைக்குள் சமர்பிக்க வேண்டும் என கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. தரவரிசை பட்டியல் 12-ந் தேதி வெளியிடப்பட்டு நேர்காணல் மூலம் மாணவர் சேர்க்கை நடக்கிறது.

அரசு பள்ளி மாணவர்களுக்கான சேர்க்கை முடிந்தபின் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும், தொடர்ந்து தனியார் பள்ளி மாணவர்களுக்கும் சேர்க்கை நடக்கிறது. வரும் 19-ந் தேதி பிளஸ்-1 வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது.