மருந்தியல் துறை டீன் தனலட்சுமி வரவேற்று, குத்து விளக்கேற்றினார். 
புதுச்சேரி

மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியில் மருந்தியல் வார விழா

மருந்து கட்டுப்பாட்டு துறை உரிமம் மற்றும் கட்டுப்பாட்டு அதிகாரி அனந்தகிருஷ்ணன் நோயாளியை காப்போம் என்ற தலைப்பில் பேசினார்.நோயாளிகளுக்கு கொடுக்கப்படும் மருந்துகள் பாதுகாப்பாக பயன்படுத்து வதை வலியுறுத்தி, இன்று விழிப்புணர்வு பேரணி நடக்கிறது.

மாலை மலர்

புதுச்சேரி:

மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லுாரியில், மருந்தியல் கல்லுாரி சார்பில், 62-ம் ஆண்டு மருந்தியல் வார விழா தொடங்கியது.

தொடக்க விழாவிற்கு, மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளையின் தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார்.

அறக்கட்டளை துணைத் தலைவர் சுகுமாறன், செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன் முன்னிலை வகித்தனர். மருந்தியல் துறை டீன் தனலட்சுமி வரவேற்று, குத்து விளக்கேற்றினார்.

மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லுாரி இயக்குனர் வெங்கடாசலபதி சிறப்புரையாற்றினார்.

புதுச்சேரி மருந்து கட்டுப்பாட்டு துறை உரிமம் மற்றும் கட்டுப்பாட்டு அதிகாரி அனந்தகிருஷ்ணன் நோயாளியை காப்போம் என்ற தலைப்பில் பேசினார்.

விழாவையொட்டி மரக்கன்றுகள் நடப்பட்டது. நோயாளிகளுக்கு கொடுக்கப்படும் மருந்துகள் பாதுகாப்பாக பயன்படுத்து வதை வலியுறுத்தி, இன்று விழிப்புணர்வு பேரணி நடக்கிறது.

நாளை உளுந்துார்பேட்டையில் மருத்துவ முகாம் நடக்கிறது. துணைப்பேராசிரியர் மதிவாணன் நன்றி கூறினார்.