புதுச்சேரி

புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு

கடந்த சில நாட்களுக்கு முன்பு பெட்ரோல், டீசல் விலை சுமார் ரூ.3 உயர்த்தப்பட்டது.

அமெரிக்கா, ஈரான் இடையிலான போரால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது.

கியாஸ் உட்பட பெட்ரோலிய பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெட்ரோல், டீசல் விலை சுமார் ரூ.3 உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் 86 பைசா உயர்ந்துள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.99.28ல் இருந்து ரூ.100.14 ஆகவும், டீசல் ரூ.89.39ல் இருந்து ரூ.90.27 ஆகவும் உயர்ந்துள்ளது. இந்த உயர்வு இன்று அதிகாலை முதல் அமலுக்கு வந்துள்ளது.

SCROLL FOR NEXT