கோப்பு படம். 
புதுச்சேரி

ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும்-வைத்திலிங்கம் எம்.பி. வலியுறுத்தல்

இத்திட்டத்தின் கீழ் அவர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் மிக குறைவு.இ.பி.எஸ். 95 ஓய்வூதியதாரர்களுக்கு குறைந்தபட்சமாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்.

மாலை மலர்

புதுச்சேரி:

புதுவை காங்கிரஸ் எம்.பி. வைத்திலிங்கம் பாராளு மன்றத்தில் பேசியதாவது:-

இ.பி.எஸ். 95 ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பயன்பெறும் ஓய்வூதியதாரர்கள் 70 லட்சத்திற்கும் மேல் உள்ளனர். இத்திட்டத்தின் கீழ் அவர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் மிக குறைவு. சராசரியாக ரூ.ஆயிரத்து 174 வழங்கப்படுகிறது. மருத்துவ செலவுக்கு எந்த உதவியும் வழங்குவதில்லை.

இதனால் வயதான காலத்தில் ஆதரவின்றி தவிக்கின்றனர். இதை கருத்தில்கொண்டு இ.பி.எஸ். 95 ஓய்வூதியதாரர்களுக்கு குறைந்தபட்சமாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். இலவச மருத்துவ உதவியும் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.