புதுச்சேரி

புதுச்சேரியில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பஸ்கள் கட்டணம் உயர்வு- பயணிகள் அதிர்ச்சி

புதுச்சேரியில் இருந்து தென் மாவட்டங்களுக்கு நேரடியாக ரெயில் சேவை கிடையாது. மேலும் ஓரிரு தமிழக அரசு மற்றும் புதுவை சாலை போக்குவரத்து கழக பஸ்களே இயக்கப்படுகின்றன.

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

தீபாவளி பண்டிகை

இதற்காக சொந்த ஊர்களுக்கு செல்ல மக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். குறிப்பாக தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ரெயில்களில் முன்பதிவு செய்தனர்.

ஆனால் முன்பதிவு தொடங்கிய அடுத்த 5 நிமிடங்களில் டிக்கெட் விற்றுத் தீர்ந்தன. சிறப்பு ரெயில்களிலும் இதே நிலைதான் உள்ளது.

புதுச்சேரியில் இருந்து தென் மாவட்டங்களுக்கு நேரடியாக ரெயில் சேவை கிடையாது. மேலும் ஓரிரு தமிழக அரசு மற்றும் புதுவை சாலை போக்குவரத்து கழக பஸ்களே இயக்கப்படுகின்றன.

பஸ் கட்டணம் உயர்வு

தமிழகத்தை போல் புதுச்சேரியிலும் தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் (திங்கட்கிழமை) அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே இருப்பதால் தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் (மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி) செல்வதற்கு ஆம்னி பஸ்களில் செல்ல முன்பதிவு செய்து வருகிறார்கள். புதுச்சேரியில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பஸ் கட்டணம் வழக்கத்தை விட கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

பயணிகள் அதிர்ச்சி

மதுரைக்கு செல்ல ஆம்னி பஸ் கட்டணம் ரூ.600 முதல் ரூ.3,799 வரையும், நெல்லை, நாகர்கோவில், கன்னியாகுமரிக்கு ரூ.1,599 முதல் ரூ.4,500 வரையும், தென்காசிக்கு ரூ.1,200 முதல் ரூ.2,400 வரையும் கட்டணம் வசூலிக்கின்றனர். ஆம்னி பஸ்களின் கட்டண உயர்வால் பயணிகள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.

SCROLL FOR NEXT