கோப்பு படம். 
புதுச்சேரி

நோய் கொடுமையால் முதியவர் தூக்கிட்டு சாவு

அரசு மருத்துவ மனையில் ஆபரேஷன் செய்து கொண்டார்.அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து ராஜூவை மீட்டனர். அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மாலை மலர்

புதுச்சேரி:

புதுவை குயவர் பாளையம் பகுதியை ராஜூ (வயது 65).

இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். 2 மாதங்களுக்கு முன்பு புதுவை அரசு மருத்துவ மனையில் ஆபரேஷன் செய்து கொண்டார். அதன் பின்பு அவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு கொண்டிருந்தது. சரியாக சாபிடமுடியாமல் இருந்தார்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளானார். நேற்று மாலை தனது வீட்டில் தூக்கில் தொங்கினார். வெளியே சென்றிருந்த அவரது மனைவி ஜெயா வீட்டிற்கு வந்த போது ராஜூ தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து ராஜூவை மீட்டனர். அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ராஜூவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும்வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து உருளைபேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.