ஒவ்வொரு தேர்தலிலும் அரசியல் கட்சிகளுக்கு எதிரான தங்களின் அதிருப்தியை தெரிவிக்க வாக்காளர்கள் பயன்படுத்தும் ஆயுதமாக நோட்டா இருந்து வந்துள்ளது.
2016 தேர்தலில் நோட்டா 13 ஆயிரத்து 240 ஓட்டுகளை (1.67 சதவீதம்) பெற்றது. 2021 தேர்தலில் நோட்டா, 10 ஆயிரத்து 803 ஓட்டுகளை (1.29 சதவீதம்) பெற்று, பல அரசியல் கட்சிகளை பின்னுக்கு தள்ளியது.
இந்த சட்டசபை தேர்தலில் 6 ஆயிரத்து 591 ஓட்டுகள் (0.77சதவீதம்) மட்டுமே நோட்டாவுக்கு பதிவாகியுள்ளது. பல சுயேச்சைகள் மற்றும் பதிவு செய்யப்பட்ட கட்சிகளை விட நோட்டா அதிக ஓட்டுகளை பெற்றிருந்தாலும், ஓட்டு சதவீதம் குறைந்துள்ளது.
தங்கள் ஓட்டுகளை பயனுள்ள வகையில் பதிவுசெய்ய வேண்டும் என்ற எண்ணம் இளைஞர்களிடையே மேலோங்கியதே நோட்டாவுக்கு ஓட்டுகள் குறைந்துள்ளது. தேர்தலில் புதிதாக களம் கண்ட த.வெ.க. இளைஞர்களின் ஓட்டுகளை பெருமளவில் ஈர்த்தது.
நோட்டாவுக்கு போட்டு ஓட்டுகளை வீணடிக்க விரும்பாத வாக்காளர்கள், மாற்றத்தை விரும்பி த.வெ.க.வுக்கு ஓட்டளித்ததே நோட்டாவின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.