மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பொதுமக்களிடம் குறைகைளை கேட்டு அறிந்த காட்சி. 
புதுச்சேரி

மின்பற்றாகுறையை போக்க புதிய டிரான்ஸ்பார்மர்-சபாநாயகர் ஏம்பலம் செல்வம் நடவடிக்கை

மணவெளி தொகுதி தமிழரசி நகரில் மின்பற்றா குறையை போக்க புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்க சபாநாயகர் ஏம்பலம் செல்வம் நடவடிக்கை எடுத்துள்ளார்.இதையடுத்து சபாநாயகர் மின்துறை அதிகாரிகளிடம் செல்போனில் தொடர்பு கொண்டு அப்பகுதியில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்க வேண்டுமென அறிவுறுத்தினார்.

மாலை மலர்

புதுச்சேரி:

மணவெளி தொகுதி தமிழரசி நகரில் மின்பற்றா குறையை போக்க புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்க சபாநாயகர் ஏம்பலம் செல்வம் நடவடிக்கை எடுத்துள்ளார்.

மணவெளி தொகுதி தமிழரசி நகரில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தலைமையில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சியில் தமிழரசி நகரில் கழிவுநீர் வாய்க்காலுடன் கூடிய புதிய சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும். குறைந்த மின் அழுத்த பிரச்சினையை சரி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் சபாநாயகர் ஏம்பலம் செல்வத்திடம் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து சபாநாயகர் மின்துறை அதிகாரிகளிடம் செல்போனில் தொடர்பு கொண்டு அப்பகுதியில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்க வேண்டுமென அறிவுறுத்தினார்.

மேலும் தமிழரசி நகரில் கழிவுநீர் வடிகால் வசதியுடன் கூடிய புதிய சாலை அமைப்பதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளது. பணிகள் விரைந்து தொடங்கப்படும் என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.