புதுச்சேரி

Puducherry Assembly Election| காங்கிரஸ், திமுக கூட்டணி ஆட்சி அமைக்கும்- வாக்களித்த பின் நாராயணசாமி பேட்டி

புதுவையில் திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு மக்கள் மத்தியில் எழுச்சி உள்ளது.

புதுவை ராஜ்பவன் தொகுதி எல்லையம்மன் கோவில் வீதியில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி வசித்து வருகிறார்.

அவர் இன்று காலை மிஷன் வீதியில் உள்ள வஉசி பள்ளியில் தனது வாக்கை செலுத்தினார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுவையில் திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு மக்கள் மத்தியில் எழுச்சி உள்ளது. ஸ்டாலின், ராகுல் புதுவைக்கு வந்து பிரசாரம் செய்து வாக்குறுதி அளித்ததின் எதிரொலியாக மக்கள் மனதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் புதுவையில் காங்கிரஸ், திமுக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றார்.

SCROLL FOR NEXT