புதுச்சேரி

தமிழகம், புதுச்சேரியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைவது உறுதி - நாராயணசாமி

சட்டசபை தேர்தலில் புதுச்சேரி மக்கள் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணிக்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள்.

புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் இந்தியா கூட்டணி அமைவது உறுதி. புதுச்சேரியில் எல்லா துறையிலும் ஊழல் மலிந்த ஆட்சி நடந்தது. சட்டசபை தேர்தலில் புதுச்சேரி மக்கள் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணிக்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள்.

புதுச்சேரியில் இந்தியா கூட்டணி சிறிய சலசலப்பை சந்தித்திருந்தாலும், காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமையும். என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணி படுதோல்வி அடையும். நடிகர் விஜய்யின் த.வெ.க. தாக்கம் தமிழகம், புதுச்சேரியில் உள்ளது. எந்த அளவு வாக்குகளை பிரிக்கும் என கணிக்க முடியவில்லை. எப்படியிருந்தாலும் தமிழகம், புதுச்சேரியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைவது உறுதி.

இவ்வாறு அவர் கூறினார்.