போராட்டம் நடைபெற்ற காட்சி. 
புதுச்சேரி

நகராட்சி ஊழியர்கள் விடுப்பு எடுத்து போராட்டம்

புதுவை நகராட்சி கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள், ஓய்வூதிய தாரர்கள் கூட்டு பேராட்டக்குழுவினர் முதல் தொடர் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.ஆம்பூர் சாலை அருகே நடந்த தர்ணா போராட்டத்துக்கு கூட்டு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் விநாய கவேல் தலைமை வகித்தார்.

மாலை மலர்

புதுச்சேரி:

புதுவை நகராட்சி கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள், ஓய்வூதிய தாரர்கள் கூட்டு பேராட்டக்குழுவினர் முதல் தொடர் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஆம்பூர் சாலை அருகே நடந்த தர்ணா போராட்டத்துக்கு கூட்டு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் விநாய கவேல் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர்கள் ஆனந்தகணபதி, வேளாங்கண்ணிதாசன், அய்யப்பன், சகாயராஜ், உதயகுமார், மண்ணாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களுக்கு சம்பளம், ஓய்வூதியத்தை நேரடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்த தொடர் விடுப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.