புதுச்சேரி

அமைச்சர் நமச்சிவாயம் டெல்லி பயணம்: உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்திக்க திட்டம்

மத்திய மந்திரிகள் அமித்ஷா, மன்சுக் மாண்டவியா, அர்ஜூன்ராம் மெக்வால் உள்ளிட்ட அமைச்சர்களையும், பாஜக தலைவர்களையும் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.

புதுவை மாநில அமைச்சராக பாஜகவை சேர்ந்த நமச்சிவாயம் கடந்த 13ந் தேதி பதவியேற்றார்.

முதல்-அமைச்சர், அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் பாஜகவின் தேசிய தலைவர் நிதின்நபின், அமைப்பு செயலாளர் சந்தோஷ் ஆகியோர் பங்கேற்றனர். அமைச்சர் நமச்சிவாயம் அழைப்பின்பேரில் இவர்கள் பங்கேற்றனர். இதனால் அவர்களுக்கு நன்றி தெரிவிக்க அமைச்சர் நமச்சிவாயம் இன்று காலை டெல்லி சென்றுள்ளார்.

அங்கு தேசிய தலைவர் நிதின்நபின், அமைப்பு செயலர் சந்தோஷ் ஆகியோரை சந்தித்து பதவியேற்பு விழாவில் பங்கேற்றதற்காக நன்றி தெரிவிக்கிறார். தொடர்ந்து அவர் மத்திய மந்திரிகள் அமித்ஷா, மன்சுக் மாண்டவியா, அர்ஜூன்ராம் மெக்வால் உள்ளிட்ட அமைச்சர்களையும், பாஜக தலைவர்களையும் அவர் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.