கோப்பு படம். 
புதுச்சேரி

அமைச்சர் நமச்சிவாயம் துபாய் பயணம்

ஆலோசனை கூட்டங்களில் அமைச்சர் நமச்சிவாயம் பங்கேற்கிறார்.சுற்றுலாத்துறை அமைச்சர் என்பதால் லட்சுமி நாராயணனுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.

மாலை மலர்

புதுச்சேரி:

துபாயில் நடைபெறும் சர்வதேச சுற்றுலா கண்காட்சியில் புதுவை அரங்கம் இடம் பெற்றுள்ளது.

சர்வதேச அளவில் சுற்றுலா பயணிகளை புதுவைக்கு ஈர்க்க அமைச்சர் லட்சுமிநாராயணன், என்.ஆர். காங்கிரஸ், பா.ஜனதா, தி.மு.க., காங்கிரஸ் மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் துபாய் சென்றுள்ளனர். சுற்றுலாத்துறை அமைச்சர் என்பதால் லட்சுமி நாராயணனுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.

சபாநாயகர் மற்ற அமைச்சர்கள் துபாய் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை. அமைச்சர் நமச்சிவாயம் தனிப்பட்ட பயணமாக துபாய் செல்ல மத்திய அரசிடம் விண்ணப்பித்து அனுமதி பெற்றார். இதையடுத்து துபாய் கிளம்பிச் சென்றார்.

அங்குள்ள எம்.எல்.ஏ.க்கள் குழுவோடு இணைந்து துபாய் சுற்றுலா கண்காட்சி, கலந்துரையாடல், ஆலோசனை கூட்டங்களில் அமைச்சர் நமச்சிவாயம் பங்கேற்கிறார். எம்.எல்.ஏ.க்கள் நாளை மறுநாள் புதுவை திரும்பு கின்றனர்.