புதுச்சேரி

வெயிலின் தாக்கம் குறைந்தது: புதுவையில் மழை பெய்யும் என வானிலை இலாகா அறிவிப்பு

8 நாட்களுக்கு பிறகு நேற்று 100 டிகிரிக்கு கீழ் வெப்பம் பதிவானது. நேற்று 98.24 டிகிரி வெப்பம் பதிவானது.

புதுவையில் அக்னி நட்சத்திரம் முடிந்தும் வெயிலின் தாக்கம் குறையவில்லை.

நாள்தோறும் 100 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவானது. கடந்த 2ம் தேதி 103, 4ம் தேதி 101, 5ம் தேதி 102.7, 7ம் தேதி 100.8 என தொடர்ச்சியாக 8 நாட்கள் அனல் காற்றுடன் 100 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவானது.

இதனால் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் சிரமப்பட்டனர். 8 நாட்களுக்கு பிறகு நேற்று 100 டிகிரிக்கு கீழ் வெப்பம் பதிவானது. நேற்று 98.24 டிகிரி வெப்பம் பதிவானது.

வளிமண்டல சுழற்சி காரணமாக வரும் 17-ந்தேதிவரை புதுவை, காரைக்காலி்ல லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. புதுவை மக்களுக்கு ஆறுதலை அளித்துள்ளது.