மருத்துவமனை பெண்கள் கழிவறையை வீடியோ எடுத்து பரப்பிய விவகாரத்தில் கிஜேஷ்குமாரை போலீசார் கைது செய்தனர். மருத்துவமனை ஊழியர்களிடம் தகராறு செய்தது தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது.
புதுவை மாநிலம் மாகி பிராந்தியம் பள்ளூரைச் சேர்ந்தவர் கிஜேஷ்குமார் (50). இவர் கடந்த 13-ந்தேதி மதியம் பள்ளூர் சமூக சுகாதார நிலையத்திற்கு வந்து உள்ளார்.
அப்போது அங்கு பணியில் இருந்த பெண் டாக்டர் மற்றும் ஊழியர்களிடம் தகராறு செய்துள்ளார்.
மேலும் அனுமதி இல்லாமல் பெண்கள் மருத்துவ வார்டு கழிவறையை வீடியோ எடுத்து, அதை வாட்ஸ்அப் மூலம் பரப்பியுள்ளார். இதுகுறித்து மருத்துவமனை பொறுப்பாளர் டாக்டர் ஜைபுன்னிசா பள்ளூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின்பேரில், பள்ளூர் போலீசார் வழக்குப் பதிந்து, கிஜேஷ்குமாரை கைது செய்தனர். மருத்துவமனை ஊழியர்களிடம் தகராறு செய்தது, பெண்கள் கழிவறையை வீடியோ எடுத்தது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.