புதுச்சேரி

புதுவையில் 59 மையங்களில் நாளை நூலக உதவியாளர் பணி தேர்வு- தேர்வர்களுக்கு கட்டுப்பாடு

தேர்வர்கள் நுழைவு சீட்டுடன் அடையாள அட்டை அசல் ஒன்று கொண்டுவர வேண்டும். காலை 9.30 மணிக்கு தேர்வு மைய நுழைவு வாயில் மூடப்படும்.

புதுவை கலை பண்பாட்டு துறையில் காலியாக உள்ள 26 இளநிலை நூலக உதவியாளர், ஒரு காட்சி கூட உதவியாளர் பணிக்கு ஒருங்கிணைந்த உயர்நிலை தேர்வு நாளை ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது.

புதுவையில் 44, காரைக்காலில் 9, மாகியில் 2, ஏனாமில் 5 என மொத்தம் 59 மையங்களில் தேர்வு நடக்கிறது. மொத்தம் 21 ஆயிரத்து 688 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர்.

தேர்வர்கள் நுழைவு சீட்டுடன் அடையாள அட்டை அசல் ஒன்று கொண்டுவர வேண்டும். காலை 9.30 மணிக்கு தேர்வு மைய நுழைவு வாயில் மூடப்படும். அதற்கு முன்பு தேர்வர்கள் வர வேண்டும்.

கருப்பு வண்ண பால்பாயின்ட் பேனா, நுழைவுச்சீட்டு, அசல் அடையாள அட்டை மட்டுமே கொண்டு வர வேண்டும். வேறு மின்னணு சாதனம் கொண்டு வரக்கூடாது.

தேர்வின்போது முறையற்ற வழிகளை பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் சட்ட நடவடிக்கை, வரும்கால தேர்வுகள் எழுத தடை விதிக்கப்படும் என தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பங்கஜ்குமார் ஜா தெரிவித்துள்ளார்.