புதுச்சேரி

புதுச்சேரியில் எலுமிச்சை விலை கடும் உயர்வு

கோடை தொடக்கத்தில் எலுமிச்சை பழத்தை அதிகம் வாங்க தொடங்கியுள்ளனர். அதனால் போதிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரியில் கோடை வெயில் கடுமையாக சுட்டெரித்து வருகிறது.

உடல் வெப்பத்தை குறைக்க தர்பூசணி, இளநீர் போன்றவற்றுடன் எலுமிச்சை ஜூஸ் மக்கள் அதிக அளவில் அருந்தி வருகின்றனர். இதனால் சந்தையில் எலுமிச்சைக்கான டிமாண்ட் எதிர்பாராத வகையில் இந்த வருடம் அதிகமாக உயர்ந்துள்ளது.

புதுச்சேரியில் தற்போது பெரிய எலுமிச்சை ஒன்று ரூ.15ம், அதற்கு அடுத்த நிலையில் உள்ள பழம் ரூ.10க்கும் விற்பனையாகிறது. உள்ளூர் சிறிய எலுமிச்சை பழங்கள் கிலோ ரூ. 200க்கு மேல் விற்பனையாகிறது.

இதுபற்றி விற்பனையாளர்கள் கூறுகையில், வெளிமாநிலங்களில் இருந்து எலுமிச்சை வரத்து அதிகமாக இருந்தது. அதனால் விலை குறைவாக இருந்தது. தற்போது வெளியூர் வரத்து முற்றிலும் நின்று விட்டது. அத்துடன் உள்ளூர் பழங்களும் பொடியாக உள்ளன. அத்துடன் கோடை தொடக்கத்தில் எலுமிச்சை பழத்தை அதிகம் வாங்க தொடங்கியுள்ளனர். அதனால் போதிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதனால் விலை உயர்வு அதிகமாக உள்ளது" என்றனர்.

SCROLL FOR NEXT