மின் கம்பத்தில் மோதி நிற்கும் தனியார் பஸ். 
புதுச்சேரி

நள்ளிரவில் தாறுமாறாக ஓடிய பஸ் மின் கம்பத்தில் மோதியது

புதுச்சேரி நோக்கி வந்த தனியார் பஸ் பயணிகளை இறக்கி விட்டு நள்ளிரவு ஓய்வு எடுப்பதற்காக முதலியார் பேட்டை நோக்கி வந்தது.போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி:

புதுச்சேரியில் இயக்கப் பட்டு வரும் தனியார் பஸ்கள் பணி நேரம் முடிந்து இரவு நேரங்களில் காலியான இடங்களில் நிறுத்திவிட்டு டிரைவர்கள் ஓய்வெடுப்பது வழக்கம்.

அதுபோல் நேற்று இரவு கோரிமேட்டில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்த தனியார் பஸ் பயணிகளை இறக்கி விட்டு  நள்ளிரவு ஓய்வு எடுப்பதற்காக முதலியார் பேட்டை நோக்கி வந்தது.

முதலியார் பேட்டையில் இருந்து உடையார் தோட்டம் வழியாக துறைமுகம் செல்லும் வழியில் பஸ் சென்ற போது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ் தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் இருந்த மின் கம்பத்தின் மீது பயங்கரமாக மோதியது. மேலும் அருகில் உள்ள வீட்டிலும் மோதி நின்றது.

இந்த விபத்தில் மின்கம்பம் சேதம் அடைந்த துடன் வீட்டின் முன் பகுதி சேதமானது. ஆனால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை.

விபத்து குறித்து போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நள்ளிரவில் ஏற்பட்ட இந்த திடீர் விபத்தினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

SCROLL FOR NEXT