கோப்பு படம். 
புதுச்சேரி

மின் கட்டணம் செலுத்தாவிட்டால் இணைப்பு துண்டிக்கப்படும்

அதிகாரி எச்சரிக்கைநிலுவைத்தொகை, மின் கட்டணத்தை உரிய நேரத்தில் செலுத்தி மின் இணைப்பு துண்டிப்பை தவிர்க்க வேண்டும்.

புதுச்சேரி:

புதுவை மின்துறை கிராம கோட்டம் (தெற்கு) செயற்பொறியாளர் செல்வராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மின்துறை தீவிர மின் துண்டிப்பு மேற்கொள்ள இருப்பதால் கிராமம் (தெற்கு) கோட்டம் அலுவலகத்துக்கு உட்பட்ட அரியாங்குப்பம், தவளகுப்பம், கிருமாம்பாக்கம், பாகூர், கரிக்கலாம்பாக்கம், வடமங்கலம், திருவண்டார்கோவில், வாதானூர், கரியமாணிக்கம், கரையாம்புத்தூர் ஆகிய பிரிவு அலுவலகங்களுக்கு உட்பட்ட மின் நுகர்வோர்கள் அனைவரும் தங்களின் நிலுவைத்தொகை, மின் கட்டணத்தை உரிய நேரத்தில் செலுத்தி மின் இணைப்பு துண்டிப்பை தவிர்க்க வேண்டும். நிலுவைத்தொகை முழுமையாக செலுத்திய பிறகே மின் இணைப்பு வழங்கப்படும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.