புதுச்சேரி

PM Modi | புதுச்சேரி நிகழ்ச்சியில் பங்கேற்பதை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்- பிரதமர் மோடி

என்டிஏ அரசு புதுச்சேரி மக்களின் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றி உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. முதலமைச்சராக ரங்கசாமி உள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்க தற்போதே காய் நகர்த்தி வருகிறது. இதற்காக மத்திய மந்திரிகள் அடிக்கடி புதுச்சேரிக்கு வந்து கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பிரதமர் மோடி தனது புதுச்சேரி வருகையையொட்டி தனது எக்ஸ் தள பக்கத்தில் தமிழில் பதிவு வௌியிட்டுள்ளார்.

அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

கடந்த ஐந்து ஆண்டுகளில் இரட்டை என்ஜின் என்டிஏ அரசு புதுச்சேரி மக்களின் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றி உள்ளது. ஆகவேதான் புதுச்சேரி மக்கள் மீண்டும் என்டிஏ அரசை தேர்ந்தெடுக்க உள்ளனர்.

'எனது வாக்குச்சாவடி வலிமையான வாக்குச்சாவடி - புதுச்சேரி' நிகழ்ச்சியில், மார்ச் 30 மாலை 05:30 மணிக்குப் பங்கேற்பதை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.