புதுச்சேரி

புதுச்சேரியில் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரிப்பு- சாலைகள் வெறிச்சோடியது

மக்கள் பகல் நேரங்களில் வெளியே செல்வதை தவிர்க்கின்றனர்.

புதுச்சேரி:

புதுவையில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

சுட்டெரிக்கும் வெயிலால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். கத்திரி தொடங்கும் முன்பே கடந்த சில நாட்களாக புதுவையில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. நேற்று 95 டிகிரி வெப்பம் பதிவானது. இதனால் மக்கள் பகல் நேரங்களில் வெளியே செல்வதை தவிர்க்கின்றனர்.

அவசர தேவைகளுக்கு மட்டுமே வெளியே செல்கின்றனர். அப்போதும் தலையில் துணி, தலை கவசம் அணிந்து செல்கின்றனர். வெயிலின் தாக்கத்தால் புதுவை நகரில் பல சாலைகள் வாகன போக்குவரத்தின்றி வெறிச்சோடியுள்ளது.