புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் செப்டம்பரில் உள்நாட்டு ஜி.எஸ்.டி. ரூ.179 கோடி வசூலாகியுள்ளது. கடந்தாண்டு செப்டம்பர் மாதம் ரூ.259 கோடி வசூலான நிலையில், இந்தாண்டு 31 சதவீதம் குறைந்துள்ளது.
நாடுமுழுவதும் 2026-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஜி.எஸ்.டி. வருவாய் நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி, கடந்த மாதம் மொத்தம் ஜி.எஸ்.டி. ரூ.2 லட்சத்து 3 ஆயிரத்து 521 கோடி ஆக பதிவாகியுள்ளது.
இது கடந்தாண்டை ஒப்பிடுகையில் 14.7 சதவீதம் அதிகரித்துள்ளது. இதில் உள்நாட்டு ஜி.எஸ்.டி. ரூ.1,37,996 கோடியாக இருந்து 10.1 சதவீதமும், இறக்குமதி மூலம் கிடைத்த ஜி.எஸ்.டி. ரூ.65,525 கோடியாக இருந்து 25.9 சதவீதமும் உயர்ந்துள்ளது. மேலும் செப்டம்பர் மாதத்தில் மொத்தமாக ரூ.27,001 கோடி ஜி.எஸ்.டி. திருப்பி தொகை வழங்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து நாட்டின் நிகர ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.1,76,520 கோடியாக உயர்ந்துள்ளது. மாநிலவாரியான உள்நாட்டு ஜி.எஸ்.டி. வசூலில் மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்கள் முன்னிலையில் உள்ளன.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் செப்டம்பரில் உள்நாட்டு ஜி.எஸ்.டி. ரூ.179 கோடி வசூலாகியுள்ளது.
கடந்தாண்டு செப்டம்பர் மாதம் ரூ.259 கோடி வசூலான நிலையில், இந்தாண்டு 31 சதவீதம் குறைந்துள்ளது. அதே நேரத்தில், புதுச்சேரியின் எஸ்.ஜி.எஸ்.டி. ரூ.49 கோடியாக உயர்ந்துள்ளது.