சிகப்பு ரேஷன் கார்டுக்கு ரூ.50 மானியம் உயர்த்தப்பட்டு ரூ.350 ஆகவும், மஞ்சள் கார்டுக்கு ரூ.50 உயர்த்தப்பட்டு ரூ.200 ஆகவும் வழங்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
புதுவை சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று 5-வது நாளாக நடைபெற்றது. இதில் பட்ஜெட் மீதான விவாதத்தில் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் பேசினர். இதனையடுத்து முதலமைச்சர் ரங்கசாமி பதில் அளித்து பேசியதாவது:-
புதுவையின் அனைத்து துறைகளுக்கும் தேவையான நிதி ஒதுக்கப்பட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் நிதியில் 93 முதல் 96 சதவீத நிதி செலவிடப்படுகிறது. ஆதிதிராவிட மாணவர்களுக்கு வழங்குவது போல் மீனவ சமுதாய மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை முழுமையாக வழங்கப்படும். கியாஸ் சிலிண்டர் மானியம் ரூ.50 உயர்த்தப்படும். இதன்படி சிகப்பு ரேஷன் கார்டுக்கு ரூ.50 மானியம் உயர்த்தப்பட்டு ரூ.350 ஆகவும், மஞ்சள் கார்டுக்கு ரூ.50 உயர்த்தப்பட்டு ரூ.200 ஆகவும் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.