புதுச்சேரி:
இலவச யோகா முகாம் வருகிற 21-ந்தேதி வரை நடக்கிறது.
சர்வதேச யோகா தினத்தை யொட்டி ஹோலிஸ்டிக் வெல்னஸ் கேர் சென்டர், ஸ்வஸ்திக் அறக்கட்டளை மற்றும் சக்ஷம் புதுவை இணைந்து நடத்திய ஒரு வார இலவச யோகா முகாம் ஆத்திச்சூடி சிறப்பு பள்ளியில் நடைபெற்றது.
இந்த யோகா முகாமில் சிறப்பு விருந்தினராக அரியாங்குப்பம் தொகுதி எம்.எல்.ஏ. பாஸ்கரன் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தார்.
இதில் புதுவை சக்ஷம் தலைவர் மற்றும் சுவஸ்திக் அறக்கட்டளையின் நிறுவனர் டாக்டர் சத்தியவண்ணன், துணைத்தலைவர் சதீஷ்குமார், செயலாளர் நடராஜன், துணை செயலாளர் இளங்கோ, பொருளாளர் திருமுருகன், ஹோலிஸ்டிக் வெல்னஸ் கேர் சென்டரின் இயக்குனர் டாக்டர் நவசக்தி, அரிச்சுவடி மனநல மையத்தின் இயக்குனர் டாக்டர் இளவழகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் யோகா பயிற்சியாளர் டாக்டர் நவசக்தி யோகா பயிற்சி அளித்தார். 50-க்கும் மேற்பட்ட பயனாளர்கள் பயிற்சி பெற்றனர். இந்த இலவச யோகா முகாமில் வருகிற 21-ந் தேதி வரை காலை 7 மணி முதல் 8 மணி வரை தினமும் இலவசமாக பயிற்சி அளிக்கப்படும்.