புதுவை ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவர்களுக்கான தேசிய வாழ்வாதார சேவை மைய வேலைவாய்ப்பு அதிகாரி ரபீந்திரநாத் மோண்டல் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் தேசிய தொழில் சேவை மையம் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நாளை வியாழக்கிழமை நடக்கிறது. அனைத்து சமூகத்தைச் சேர்ந்த வேலை தேடும் இளைஞர்களும் பங்கேற்கலாம். காலை 9.30 முதல் ஒரு மணி வரை முகாம் நடக்கும்.
முகாமில் மென்பொருள் மற்றும் உற்பத்தி நிறுவனங்கள் பங்கு கொள்கின்றன. இந்த வேலைவாய்ப்பு முகாமில் 200-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்காக பிளஸ் 2, ஐடிஐ, டிப்ளமோ, பட்டம் முடித்தவர்கள் கலந்து கொண்டு பயனடையலாம்.
18 முதல் 35 வயது நிரம்பிய அனுபவம் பெற்ற மற்றும் அனுபவம் பெறாத மாணவர்களும் பங்கு பெறலாம். முகாமில் கலந்து கொள்பவர்கள் தங்களது சுயகுறிப்பு மற்றும் கல்வி தகுதிக்கான உண்மை நகல் சான்றிதழ்களுடன் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள வேண்டும்.
வேலைவாய்ப்பு முகாம் நடேசன் நகரில் உள்ள ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவர்களுக்கான தேசிய வாழ்வாதார சேவை மையத்தில் நடைபெறும். மேலும் விபரங்களுக்கு 0413 2200115, 88700 73622, 96293 42446 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.